search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எம்.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார்.
    X
    எம்.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார்.

    தேனி மாவட்ட பள்ளிகளில் கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு

    தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார்
    தேனி:

    தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே மரிக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட எம்.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

      டாக்டர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் வருகை பதிவேடு, படுக்கை வசதி, புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வருகை தந்த பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் விதம், மருந்து, மாத்திரைகளின் இருப்பு, அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியன குறித்து மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, சிகிச்சை பெற வருகை தந்த பொதுமக்களிடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். 

    ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சை பெற வருகின்ற பொதுமக்களுக்கு டாக்டர்கள் கனிவுடன், பொறுமையாக நோயின் தன்மை குறித்து எடுத்துக்கூறி, முறையான சிகிச்சை அளித்திடவும், ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுற்றுப்புறங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திடவும், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின் வசதி போன்றவற்றை முறையாக பராமரித்திட மருத்துவ அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.

    இதேபோல் ஒக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர், மாணவ, மாணவிகளின் வருகைப்பதிவேடு, குடிநீர், மின்வசதி, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார பணிகள் குறித்தும் மதிய உணவின் தரம் குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    பின்னர் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது பாரதியார் உருவத்தை சிறப்பாக வரைந்த சென்னகிருஷ்ணன் என்ற மாணவனை பாராட்டி பேனா பரிசாக வழங்கினார். 
    Next Story
    ×