என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேகவர்த்தினி
பால்வண்டி மோதி குழந்தை பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகே இன்றுகாலை பால்வண்டி மோதி குழந்தை பரிதாபமாக பலியானது.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த பந்தேரியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது25). இவர் கூலித் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மேகவர்த்தினி என்கிற 1 வயது குழந்தை உள்ளன.
இந்த நிலையில் இன்று காலை மேகவர்த்தினி வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தாள். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த பால் வண்டியை டிரைவர் பின்னோக்கி இயக்கியதால் குழந்தை மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே குழந்தையை மீட்டு காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது என தெரிவித்தார். பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காவேரிப் பட்டணம் போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் அறிவழகன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






