என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
ஆரல்வாய்மொழி அருகே சமையல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
ஆரல்வாய்மொழி அருகே சமையல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கன்னியாகுமரி:
ஆரல்வாய்மொழி வடக்கூர் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்ற முத்து (வயது 57), சமையல் தொழிலாளி.
ஆரல்வாய்மொழி பொய்கை அணை அருகே உள்ள ஒரு தோட்டத்தில் தூக்குப்போட்டு ராமகிருஷ்ணன் பிணமாக கிடந்தார். ராமகிருஷ்ணன் பிணமாக கிடந்ததை பார்த்து அவரது உறவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
பின் னர் ஆரல்வாய்மொழி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார் கள்.
ராமகிருஷ்ணன் வீட்டில் சின்ன சின்ன பிரச் சினைகளுக்காக மன வேதனை அடைந்து தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
போலீசார் பிணத்தை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






