என் மலர்
உள்ளூர் செய்திகள்

என்.எல்.சி. அதிகாரிகளை ஊருக்குள் நுழைய தடுத்த கிராம மக்கள்
புவனகிரி அருகே என்.எல்.சி. அதிகாரிகளை ஊருக்குள் நுழைய தடுத்த கிராம மக்கள்
புவனகிரி அருகே 500-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் ஒன்று திரண்டு என்.எல்.சி. அதிகாரிகளை ஊருக்குள் வர வேண்டாம் என கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கரி வெட்டி கிராமத்தில் என்.எல்.சி. நிர்வாகம் இந்தப் பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை கையகப்படுத்தி உள்ளது. ஆனால் அவர்களுக்கான முழுமையான தொகை வழங்கப்படவில்லை.
வீட்டிற்கு ஒருவருக் குவேலை வழங்க வேண்டும் என்றும் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இன்று என்.எல்.சி. நிர்வாகம் மற்றும் நில எடுப்பு தாசில்தார் ஆகியோர் கரிவெட்டி கிராமத்தில் நிலங்களை அளப்பதற்காக சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி. சுந்தரம் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு கிராமத்திற்குள் வந்தனர். அங்கு 500-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் ஒன்று திரண்டு ஊருக்குள் வர வேண்டாம் என கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story






