என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
கெலமங்கலம் அருகே இருதரப்பினர் மோதல்- 4 பேர் மீது வழக்கு
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே இருதரப்பினர் மோதிக் கொண்டதில் 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள முகளூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி வயது (26). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது சித்தப்பா மற்றும் தாயிடம் பேசி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அப்பகுதியை சேர்ந்த அணில் வயது (26) மற்றும் முருகேஷ், வயது (47) ஆகியோர் ரவியிடம் தகராறு செய்து உருட்டுக்கட்டை மற்றும் மண்வெட்டியால் தாக்கி மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த ரவி ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து ரவி கெலமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் அணில் மற்றும் முருகேஷ் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்தார். அதேபோல் அணில் உறவினரான (16) வயது சிறுவன் கொடுத்த புகாரின் பேரில் ரவி மற்றும் சுப்பிரமணி மீது வழக்குப்பதிவு செய்தனர்.
Next Story






