என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து போராட்டம் செய்த காட்சி.
    X
    ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து போராட்டம் செய்த காட்சி.

    ஆரணி அருகே ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொது மக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பு

    ஆரணி அருகே ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொது மக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஏரிக்குப்பம் கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் ஊராட்சி மன்ற தலைவராக கிளியம்மாள் கலாமணி மற்றும் 6 உறுப்பினர்கள் உள்ளனர்.

    ஊராட்சி செயலாளராக முருகன் என்பவர் இருந்து வருகின்றார்.

    இந்நிலையில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு  சிறப்பு கிராம சபை கூட்டம் அதிகாரி சீனிவாசன் தலைமையில் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில்  இன்று நடந்தது. இதில் பொது மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    இந்த சிறப்பு கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் முருகன் தீர்மானத்தை வாசித்தார். இதில் கிராமத்தில் உள்ள 456 வீடுகளுக்கு குழாய் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதகவும் ஒரு நபருக்கு 55 லிட்டர் தண்ணீர்  வழங்கப் பட்டுள்ளதாக தீர்மானத்தில் வாசிக்கப்பட்டது.

    அப்போது குறுக்கிட்ட பொதுமக்கள் ஜல் ஜுவன் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி சிறப்பு கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×