என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
12 முதல் 14 வயதுடைய 18 ஆயிரம் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 12 முதல் 14 வயதுடைய 18 ஆயிரம் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 12 முதல் 14 வயதுடைய 18 ஆயிரம் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
உலகை அச்சுறுத்திய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
குறிப்பாக இரண்டாம் அலையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்பட்டது.
இதன் காரணமாக சுகாதாரத்துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து தடுப்பூசி போடும் பணியை முடுக்கி விட்டனர்.
இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி 16-&ந் தேதி தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
முதலில் சுகாதார பணியாளர் களுக்கும், பின்னர் முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப் பட்டு செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 60 வயதை கடந்தவர்கள் மற்றும் இணை நோய் கொண்ட 45 வயதைக் கடந்தவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 45 வயது தாண்டிய அனைவ ருக்கும் தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டது. பின்னர் 18 வயது தாண்டிய அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று காரணமாக இந்தியாவில் மூன்றாம் அலை உருவாகி வேகமாக பரவியது.
தமிழ்நாட்டிலும் இதன் தாக்கம் எதிரொலித்தது. இதன் காரணமாக 12 வயது முதல் 18 வயதுடைய சிறுவர் களுக்கு தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கத்தில் முதற்கட்டமாக 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.
பள்ளிகள் கல்லூரி களில் மாணவர்கள் படிக்கும் நிறுவனங்களில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.
இவர்களுக்கு கோவேக்சின் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 28 நாட்களுக்குப் பிறகு இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் தற்போது செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 12 முதல் 14 வயது உடைய சிறுவர்களுக்கு கடந்த 15&ந் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.
இந்த வயது உடைய சிறுவர்களுக்கு கோர்பேவேக்ஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 12 வயது முதல் 14 வயதுடைய சிறுவர்கள் மொத்தம் 66,300 பேர் உள்ளனர்.
இவர்களுக்கு அவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 12 முதல் 14 வயது உடைய சிறுவர்கள் 18 ஆயிரத்து 709 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். இது 28 சதவீதம் ஆகும்.
28 நாட்களுக்கு பிறகு மீண்டும் அவர்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Next Story