என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோரிமேடு தீயணைப்பு நிலையத்தில் அமைச்சர் சாய்.ஜெ.சவரணன்குமார் ஆய்வு செய்த காட்சி.
    X
    கோரிமேடு தீயணைப்பு நிலையத்தில் அமைச்சர் சாய்.ஜெ.சவரணன்குமார் ஆய்வு செய்த காட்சி.

    தீயணைப்பு நிலையங்களில் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் ஆய்வு

    கோடைக்காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு நிலையங்களில் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் ஆய்வு செய்தார்.
    புதுச்சேரி:

    புதுவை, காலாப்பட்டு, சேதராப்பட்டு, துத்திப்பட்டு, மேட்டுப்பாளையம், குருமாம்பேட், தட்டாஞ்சாவடி, வில்லியனூர் திருபுவனை, மதகடிப்பட்டு நெட்டப்பாக்கம், தவள குப்பம்  ஆகிய இடங்களில் நடுத்தர மற்றும் பெரிய தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. 

    கோடைகாலத்தில் தொழிற்சாலைகளில் ஏதாவது ஒரு காரணத்திற்காக தீ விபத்து ஏற்படும் நிலையில் அதனை எளிமையாக கையாண்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்து சேதங்களை குறைக்க தீயணைப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் புதுவையில் கோடைகாலத்தில் அவ்வப்போது ஏற்படும் குடிசை தீ விபத்தின் பொது உயிர் சேதம் ஏதும் ஏற்படாமல் தடுப்பதற்கும் தீயணைப்பு துறையினர் உரிய உள்கட்டமைப்பு வசதியோடு இருக்கிறார்களா? என்பதனை ஆராயவும், தீயணைப்பு நிலையங்களில் நவீன சாதனங்கள், தீயணைப்பு நிலையங்களில் தீயணைப்பு வீரர்கள் முன்னெச்சரிக்கையோடு செயல்படுகிறார்களா? என்பதனை ஆய்வு செய்ய   தீயணைப்பு துறை அமைச்சர் சாய். ஜெ.சரவணன்குமார் அனைத்து தீயணைப்பு நிலையங்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். 
    Next Story
    ×