search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவ உபகரணங்கள் வழங்கினார்.
    X
    அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவ உபகரணங்கள் வழங்கினார்.

    மலைகிராமங்களில் மருத்துவ வசதி அதிகரிக்கப்படும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    மலைகிராமங்களில் மருத்துவ வசதி அதிகரிக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
    நாகர்கோவில்:

    பத்மநாபபுரம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் ரூ.1.2 கோடி மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மனோதங்கராஜ் தலைமையில் நடந்தது. கலெக்டர் அரவிந்த் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ் வுத்துறை அமைச்சர் சுப்பிர மணியன் கலந்து கொண்டு மருத்துவ உபகரணங்கள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    யுனைடைட் வே ஆப் இந்தியா என்கிற சென்னை அமைப்பின் சார்பில் எச்.எஸ்.பி.சி. என்ற நிர்வா கத்தின் மூலம் ரூ.1.2 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வாங்கி இந்த ஆஸ்பத்திரிக்கு தரப்பட்டுள்ளது. 

    தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மனோதங்கராஜ் முயற்சியினால் சி.எஸ்.ஆர். நிதி பங்களிப்பு என்பது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு தொடர்ந்து உதவுகிறது என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியதாகும்.

    அந்த வகையில் பத்மநாப புரம் அரசு தலைமை ஆஸ் பத்திரிக்கு சி.எஸ்.ஆர். நிதி பங்களிப்பு வாயிலாக ரூ.1.2 கோடி மதிப்பிலான உபகரணங்கள் வழங்கியிருப்பது உண்மையில் பாராட்டுதற்குரியதாகும். வழங்கப்பட்ட உபகரணங்கள் அனைத்தும் மகிவும் அவசியமானதும், மிகவும் முக்கியமானதுமாக உள்ளது.

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் கொரோனா 2-ம் கட்ட பேரி டரில் ஒட்டுமொத்த தமிழகமும் சிக்கி தவித்தது.
    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மிக சிறப்பாக செயல்பட்டு ஆக்ஸிஜன் தேவை, 

    தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் பாதகாப்பு மையங்களில் அமைக்கப்பட வேண்டிய கூடுதல் படுக்கை வசதிகள் போன்ற மருத்துவ கட்ட மைப்பினை தொடர்ச்சியாக மேற் கொண்டு அனைத்து அரசு அலுவலர்களையும் ஒருங் கிணைத்து கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்தி னார்கள்.

    தமிழ்நாடு முதல் - அமைச்சர் மு.க.ஸ்டா லின் வழி காட்டுதலின்படி, மருத் துவ சேவையானது அனை வருக்கும் உரியது என்ற வகையில் அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. 

    மக்களைத்தேடி மருத்துவ திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டின் எல்லையோரத்தில் இருக்கின்ற தனி ஒரு வீட்டில் வசிப் பவருக்கும் பிசி யோதெரபி தேவைப் படுகின்ற போது, செவிலியர்கள் பிசியோதெரபி சிகிச்சை அளிக்கும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

    இது தமிழகத்தில் சுகாதாரத்துறையில் ஏற் பட்டுள்ள மிகப்பெரிய முன் னேற்றமாகும். உண்மை யில் 55 லட்சத்திற்கும் அதிகமா னோருக்கு நீரிழிவு உள்ளிட்ட பல் வேறு நோயினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங் கப்பட்டுள்ளது. 

    அனை வருக்கும் மருத்துவம் என்பது பொதுவானதாக இருக்க வேண்டும். மலைக் கிராமங்களில் இருக்கின்ற மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவ வசதிகள் அதிகரிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் பிரகலாதன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் மீனாட்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×