search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    தமிழக வேளாண் பட்ஜெட்டை வரவேற்ற விவசாய சங்கங்கள்

    தமிழக வேளாண் பட்ஜெட்டை ஏரி, ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் வரவேற்றுள்ளனர்.
    திருச்சி:


    தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் பூ. விஸ்வநாதன் தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


    தமிழக வேளாண் பட்ஜெட்டில் பெரிய மற்றும் சிறிய அணைகளை புனரமைக்கவும், புதிய தடுப்பணைகள் கட்டவும், ஏரி குளங்களை தூர்வாரவும் நீர்பாசனத்துறைக்கு ரூ. 7,333 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

    மேலும் மேட்டூர் அணையில் இருந்து நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, கடைமடை வரை குறுவை சாகுபடி தொடங்குவதற்கு முன்பாக 4,294 கி.மீட்டர் வரை கால்வாய்களை தூர்வார ரூ. 80 கோடியும், ஏரி, குளங்களில் உள்ள சீமை கருவேல முட்செடிகளை அகற்ற ரூ. 80 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    நெல் சாகுபடி திட்டத்திற்கு ரூ. 22 கோடி,  கரும்பு  டன்னிற்கு ரூ. 195 ஊக்கத்தொகை, கரூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நிலக்கடலை, எள் ஆமணக்கு, சூரியகாந்தி பரப்பை அதிகப்படுத்த ரூ. 28 கோடியே 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

    மேலும் வட்டியில்லா பயிர்கடன் வழங்க ரூ. 200 கோடியும், இலவச விவசாய மின் இணைப்பு வழங்க மானியமாக ரூ. 5,157 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் இந்த பட்ஜெட் விவசாயிகளுக்கு ஆறுதல் அளிக்கக்கூடிய வரவேற்க தக்க பாராட்டுக்குரிய பட்ஜெட்டாக உள்ளது.  இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    Next Story
    ×