search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

    போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
    கரூர்:

    கரூர் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தின் மூலம் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இலவசமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இத் திட்டத்திற்கு கலங்கரை விளக்கம் என பெயரிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, தமிழ்நாடு அரசு தேர்வாணையத் தால் நடத்தப்படவுள்ள குரூப் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் வரும் 23-ந் தேதியன்று தொடங்கப்பட உள்ளது. கரூர் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சி ஒன்றியங் களிலும் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளது.

    வாரத்தில் 4 நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும். மேலும், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மேற்கண்ட 7 மையங்களிலும், செயலி மூலம், துறை ரீதியான வல்லுநர்களைக் கொண்டு நேரலையாக போட்டித் தேர்வுக்கான வகுப்புகள் எடுக்கப்படும்.

       கரூர் மாவட்டத்தில் 249 நூலகங்களிலும் போட்டித் தேர்வுகளுக்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பயிற்சி கையேடுகள், மாதிரி வினாத்தாள்கள், தேர்வு எழுதுவதற்கான ஓ.எம்.ஆர். தாள்கள் இலவசமாக வழங்கப்படும். 

    தேர்வு எழுதும் அனைவரது விடைத் தாள்களும் பிரத்யேகமான ஓ.எம்.ஆர். விடைத்தாள் மதிப்பிடும் கருவியின் மூலம் திருத்தப்பட்டு, மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள், பயிற்சி மையங்கள் அளவில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களின் பெயர், புகைப்படம் கரூர் மாவட்ட இணையதளத்தில் பதிவேற்றப்படும்.

        போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளில் பங்குபெற விரும்பும் நபர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையினை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் பெயர் மற்றும் விபரங்களை பதிவு செய்யலாம். இதுகுறித்த மேலும் விபரங்களுக்கு மாவட்ட மைய நூலக அலவலரை 04324 -263550 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

      இந்த பயிற்சி வகுப்புகளை அனைவரும் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
    Next Story
    ×