search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் உர கலப்படம் குறித்து செயல் விளக்கம் அளித்தபோது எடுத்தப்படம்.
    X
    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் உர கலப்படம் குறித்து செயல் விளக்கம் அளித்தபோது எடுத்தப்படம்.

    உரங்களில் மணல், மரத்தூள் கலப்பதை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு உரங்களில் மணல், மரத்தூள் கலப்பதை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    திருவண்ணாமலை:

    என்.எம்.ஆர். உழவர் பேரவை மாவட்டத் தலைவர் புருஷோத்தமன் தலைமையில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு உரங்களில் கலப்படம் செய்து செயற்கையாக யூரியா தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதை கண்டித்தும், செயல்முறை விளக்கம் அளித்தும் விவசாயிகள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறும்போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடியும், 50 ஆயிரம் ஏக்கரில் கரும்பு சாகுபடியும் நடைபெற்று வருகிறது. இந்தப் பயிர்களுக்கு தேவையான யூரியா உரம் கிடைப்பதில்லை.

    அதனை தனியார் தயாரிக்கும் கலப்பு உரங்களில் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். கலப்பு உரங்களில் யூரியா கலந்து இருப்பது தெரியாமல் இருப்பதற்காக சாயம் பயன்படுத்துகின்றனர்.

    மேலும் எடையை அதிகரித்து காட்டுவதற்காக மரத்தூள், மணல் ஆகியவற்றை சேர்க்கின்றனர். எனவே அதில் தண்ணீர் கலந்து விவசாயிகளுக்கு உண்மை நிலையை அனைவருக்கும் தெரிவித்து இந்த போராட்டத்தை நடத்தியுள்ளோம்.

    மாவட்டத்தில் இதுபோன்ற போலிகலப்பட உரங்களை தயார் செய்து அதிக விலைக்கு விற்பனை செய்து விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் உரக்கடைகளின் உரிமையை ரத்து செய்ய வேண்டும்.

    போலி உர ஆலைகளை மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து யூரியா உரம் விவசாயிகளுக்கு தடையின்றி கிடைக்க செய்ய வேண்டும் என்றனர்.
    Next Story
    ×