என் மலர்
உள்ளூர் செய்திகள்

செல்லபெருமாள்பேட்டை விவேகானந்தா பள்ளியில் போலீஸ் பணி எழுத்து தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள்.
போலீஸ் பணிக்கு 5 மையங்களில் எழுத்து தேர்வு
போலீஸ் பணிக்கு 5 மையங்களில் தேர்வு நடக்கிறது.
புதுச்சேரி:
புதுவை காவல் துறையில் காலியாக உள்ள கான்ஸ்டபிள் 390, டெக் ஹேண்ட்லர் 29 பணியிடங்கள் நிரப்ப கடந்த ஜனவரி 19-ந் தேதி உடல் தகுதி தேர்வு தொடங்கி 20 நாட்கள் நடந்தது.
இதில் ஆண்கள் 2 ஆயிரத்து 207, பெண்கள் 687 பேர் என மொத்தம் 2 ஆயிரத்து 894 பேர் தேர்வாகினர்.
இவர்களுக்கு எழுத்துத் தேர்வு விவேகானந்தா, சங்கர வித்யாலயா, லாஸ்பேட்டை வள்ளலார் பெண்கள் மேல் நிலைப்பள்ளி, பாத்திமா மேல்நிலைப்பள்ளி, கதிர்காமம் அரசு பெண்கள் பள்ளி என 5 மையங்களில் நடந்தது.
தேர்வுகளை புதுவை அரசின் நிர்வாக சீர்திருத்தத் துறை நடத்தியது.
காலை 10 முதல் 12 மணி வரை முதல் தாள் தேர்வு நடந்தது. மதியம் 2 முதல் 4 மணி வரை 2-ம் தாள் தேர்வு நடக்கிறது. டெக் ஹேண்ட்லர் பணிக்கு (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 முதல் 11.30 மணிவரை தேர்வு நடக்கிறது. தேர்வில் பங்கேற்கும் அனைவருக்கும் விடைத்தாள் வழங்கப்படும்.
இன்று இரவே தேர்வுக்கான விடைகள் இணையதளத்தில் வெளியிடப்படும். விடைகள் குறித்து ஆட்சேபனை தெரிவிக்க 24 மணி நேரம் கால அவகாசம் அளிக்கப்படும். 21-ந் தேதி காலை இறுதி விடைத்தாள் வெளியிடப்படும். அன்று இரவு அல்லது மறுநாள் தேர்வு செய்யப்பட்டவர்களின் விபரம் வெளியிடப்படும்.
போலீஸ் தேர்வில் விளையாட்டு வீரர்கள் பிரிவில் 19 பேர் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டது. இவர்களுக்கு எழுத்து தேர்வு கிடையாது.
Next Story






