என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்த காட்சி.
  X
  ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்த காட்சி.

  பங்குனி உத்திரத்தையொட்டி முருகர் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பங்குனி உத்திரத்தையொட்டி முருகர் கோவில்களில் தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.
  வேலூர்:

  பங்குனி உத்திர திருவிழாவையொட்டி இன்று முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன.

  வள்ளிமலை முருகன் கோவிலில் இன்று காலை சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது.ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.சிறப்பு அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

  ரத்தினகிரி பாலமுருகன் கோவிவில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பக்தர்கள் மலை அடிவாரத்தில் இருந்து பால்குடம் எடுத்து வந்தனர். பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் சிறப்பு பூஜை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  வேலூர் சைதாப்பேட்டை பழனி ஆண்டவர் கோவில், பேரி பேட்டை சுப்பிரமணியசாமி கோவிலில் இன்று பங்குனி உத்திரத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 

  சத்துவாச்சாரியில் உள்ள முருகன் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி சிறப்பு அபிஷேகம் பூஜை நடந்தது.

  வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இன்று மாலை பங்குனி உத்திரத்தையொட்டி ஜலகண்டேஸ்வரர், அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.
  Next Story
  ×