என் மலர்
உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் கலெக்டர் அருண் தம்புராஜ் பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
வேளாங்கண்ணியில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.
உலக மகளிர்தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில்
வேல்டு விஷன் இந்தியா சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள்
பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும்
பெண்களுக்கு ஏற்ற சட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு
ஏற்படுத்தப் பட்டது. அதனைத் தொடர்ந்து வாழ்வாதார வளர்ச்சியில் மேம்பட்ட ஒவ்வொரு பயனாளிகளுக்கு பாராட்டு சான்றிதழை
மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவஹர், சார்பு நீதிபதி சுரேஷ்குமார் வேர்ல்டு விஷன் இந்தியாவின் துணை இயக்குனர் சாம்சங் பந்து மற்றும் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.
Next Story






