என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விதைப்பு திருவிழா
    X
    விதைப்பு திருவிழா

    விதைப்பு திருவிழாவை கொண்டாடிய படுகர் இன மக்கள்

    பாரம்பரிய இசையுடன் நடந்தது.
    ஊட்டி:

    மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர்களால் அறிமுகம் செய்யப்பட்ட மலைக் காய்கறிகளான கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகள் இன்னமும் தொடர்ந்து பயிரிடப்பட்டு வருகின்றன. 

    இந்நிலையில் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் விவசாயிகள் மே மாத கோடை சீசனுக்கு அறுவடை செய்யும் வகையில் மார்ச் மாதத்தில் விதைகளை விதைப்பது வழக்கம்.இவ்வாறு தாங்கள் விதைக்கும், விதைகள் நல்ல மகசூல் தரவேண்டும் என்பதற்காகவும், விவசாயத்தின்போது நல்ல மழை பெய்து நல்ல லாபம் கிடைக்க வேண்டும், 

    கால்நடைகளுக்குத் தேவையான உணவு கிடைக்க வேண்டும் என்பத ற்காக ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் 2-வது வாரத்தில் படுகர் சமுதாய மக்களின் மேற்குநாடு சீமைக்கு உள்பட்ட ஊட்டி அருகே உள்ள அப்புக்கோடு கிராமத்தில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் 33 கிராமங்களை சேர்ந்த மக்கள் விதை விதைப்புத் திருவிழா நடத்துவது வழக்கம். இதன்படி விதை விதைப்புத் திருவிழா அப்புக்கோடு கிராமத்தில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் நேற்று நடைபெற்றது

     இந்த திருவிழாவில் படுகர் சமுதாய மக்கள் தங்களின் பாரம்பரிய உடையான வெண்ணிற உடை அணிந்து தங்களின் பாரம்பரிய இசையைப் பெண்கள் பாட, ஆண்கள் நடனமாடி விதை விதைப்பின்போது நல்ல மழை பெய்து, நல்ல மகசூல் தர வேண்டும் என சிறப்பு வழிபாடு நடத்தினர்.

     அப்போது, கால்நடைகளுக்குத் தேவையான உணவு, விவசாயிகள் நோய் நொடியின்றி விவசாயம் செய்ய சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் விதைகளை விதைக்கும் பணியை உடனடியாகத் தொடங்கினர்.
    Next Story
    ×