என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜாமீனில் வருவதற்காக பேரறிவாளனை சென்னை புழல் சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்ற காட்சி.
    X
    ஜாமீனில் வருவதற்காக பேரறிவாளனை சென்னை புழல் சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்ற காட்சி.

    பரோலை ரத்து செய்து ஜாமீனில் வருவதற்காக பேரறிவாளனை புழல் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர்

    பரோலை ரத்து செய்து ஜாமீனில் வருவதற்காக பேரறிவாளன் புழல் ஜெயிலுக்கு அழைத்து செல்லப்பட்டார்.
    வேலூர்:

    முன்னாள்  பிரதமர்ராஜீவ் காந்தி கொலை வழக்கில்  பேரறிவாளன் 32 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். 

    கடந்த மே மாதம் 28-ந்தேதி முதல் தற்போது வரை பேரறிவாளன் சுமார்9 மாத காலமாக பரோல் வழங்கப்பட்டு வீட்டிலேயே தங்கியுள்ளார். 

    மேலும், பேரறிவாளன் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் விடுதலைக் கோரி மனு அளிக்கப்பட்டிருந்தது. 

    முதல்-அமைச்சருக்கு பேரறிவாளனின் தாயார்ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். 

    இந்த நிலையில், பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 
    புழல் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர்.
     
    பரோலில் வெளியே வந்த பேரறிவாளன் கடந்த 11-ந் தேதி பரோலை ரத்து செய்ய  புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஜாமீன் வழங்கப்பட்ட ஆணை ஜெயிலுக்கு வராததால் அவர்வீட்டிற்கு திரும்பி வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை மீண்டும் பேரறிவாளனை டி.எஸ்.பி மணிமாறன் தலைமையிலான போலீசார்புழல் ஜெயிலுக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

    புழல் சிறையில்  பரோலை ரத்து செய்த பின் பேரறிவாளன் ஜாமீனில் வெளியே வருவார்என  தெரிவித்தனர்.
    Next Story
    ×