என் மலர்
உள்ளூர் செய்திகள்

குட்டையில் வீசப்பட்ட பெண் சிசு பிணம்.
குடியாத்தத்தில் குட்டையில் பெண் சிசு பிணம் வீச்சு
குடியாத்தம் அருகே குட்டையில் பெண் சிசு பிணம் வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த டி.டி.மோட்டூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி அருகே தண்ணீர் குட்டை உள்ளது.
அந்த குட்டை பகுதியில் இருந்து இன்று காலையில் துர்நாற்றம் வீசியது. மேலும் நாய்கள் சுற்றி வந்துள்ளன. இதனை கண்ட கிராம மக்கள் தண்ணீர் குட்டை அருகே சென்று பார்த்தனர்.
அங்கு பெண் சிசு பிணம் ஒன்று இறந்த நிலையில் கிடந்ததது.
அந்த குழந்தை பிறந்து ஒரு நாள் ஆகியிருக்கலாம்.
அழுகிய நிலையில் சிசு உடல் உள்ளது. இது குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்து பார்த்தனர்.
சிசுவின் உடலை பார்த்து பெண்கள் கண்ணீர் விட்டு அழுதனர். இந்த சம்பவம் தொடர்பாக பேரணாம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






