search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் தலமையில் கலந்துரையாடல் கூட்டம்.
    X
    தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் தலமையில் கலந்துரையாடல் கூட்டம்.

    தூய்மை பணியாளர்கள் கையுறைகள் அணிந்து பணியாற்ற வேண்டும்: ஆணைய தலைவர் வெங்கடேசன்

    தூய்மை பணியாளர்கள் கையுறைகள் அணிந்து பணியாற்ற வேண்டுமென ஆணைய தலைவர் வெங்கடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக வருவாய் கூட்டரங்கில், தேசிய தூய்மை பணியாளர்களின் ஆணைய தலைவர் வெங்கடேசன், மாவட்ட கலெக்டர் அர விந்த் தலைமையில், மாவட்ட சூப்பிரண்டு பத்ரி நாராயணன் முன்னிலையில், துறை அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுடன் கலந்துரையாடல் நடந்தது.

    அப்போது வெங்கடேசன் கூறியதாவது:-

    மத்திய அரசின் கீழ் செயல்படும் சஃபாய் கரம்சாரிகளுக்கான (தூய்மை பணியாளர்கள்) ஆணைய மானது இந்தியா முழுவதும் தூய்மை பணியில் ஈடுபடும் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் நலன் குறித்து தெரிந்து கொண்டு தேவையான உதவி கள் வழங்கப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி மாவட்டத் திற்குட்பட்ட நாகர்கோவில் மாநகராட்சி, பத்மநாபபுரம், குளச்சல், குழித்துறை, கொல்லங்கோடு ஆகிய 4 நகராட்சிகள், பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிக ளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களின்  கோரிக் கைகள் குறித்து கேட்டறியப் பட்டது.

    மேலும், தங்களது உடல் நலத்தை பொருட்படுத்தாமல் தூய்மை பணியில் ஈடுபடும் பணியாளர்கள் முகக்கவசம் மற்றும் கையுறைகள் அணிந்து பணியாற்ற வேண்டும். 

    தூய்மை பணியாளர்களுக்கு நோய் தொற்று விரைவில் பாதிக்கும் என்பதால் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ முகாம் நடத்தி உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென  துறை சார்ந்த அலுவலர்களுக்கு ஏதாவது குறைபாடுகள் ஏற்பட்டால் நிர்வாக ரீதியாக மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக மாவட்ட கண்காணிப்பு மற்றும் விழிப்பு குழுவினர்களிடம் தெரிவிக்கலாம்.

    மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவது தற்போது இல்லை. அதனை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நிரந்தரம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம், தொழிலாளர் நல வைப்பு நிதி போன்ற வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டுமென துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேது ராமலிங்கம், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் நாகரா ஜன், அகஸ்தீஸ்வரம் வட்டாட் சியர் சேகர் உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×