search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தேர்வு கட்டுப்பாட்டு அலுவலக கட்டிடத்தை அமைச்ச
    X
    புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தேர்வு கட்டுப்பாட்டு அலுவலக கட்டிடத்தை அமைச்ச

    புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் திறப்பு

    புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் மற்றும் தமிழ் மொழி ஆய்வகத்தை அமைச்சர் ரகுபதி திறந்துவைத்தார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில், புதிதாக கட்டப்பட்டுள்ள தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகக் கட்டிடம் மற்றும் தமிழ் மொழி ஆய்வகத்தினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில்  அமைச்சர் ரகுபதி பேசியதாவது:

    தமிழ்நாடு முதலமைச்சர் உயர்கல்வித்துறையில் தமிழகம் சிறந்து விளங்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் கல்லூரிகளுக்குதேவான வகுப்பறைகள், ஆய்வகங்கள் அமைப்பதற்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்தி வருகிறார். 

    அதன்படி புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில், ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகக் கட்டிடம் மற்றும் தமிழ் மொழி ஆய்வகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    பெண்கள் வீட்டின் கண்கள் மட்டுமல்ல, நாட்டின் கண்கள். மாணவிகள் தாங்கள் விரும்பும் படிப்பை பயில முழு சுதந்திரம் வழங்க வேண்டும். பெண்களும் தங்களுக்கு தேவையான துறையை தேர்ந்தெடுத்து பயின்று உயர் பதவிக்கு வரவேண்டும்.

    அரசு மகளிர் கலைக்கல்லூரி இனிமேல் அதன் பழைய பெயராகிய கலைஞர் கருணாநிதி கல்லூரி என வழங்கப்படுவதற்கு ஆவன செய்யப்படும். இக்கல்லூரியின் விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படும். விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு நமக்கு நாமே திட்டத்தில் பணி மேற்கொள்ளப்படும்.

    இதன்மூலம் மாணவர்களுக்குத் தேவையான கற்றல், கற்பித்தல் திறன்களை மேம்படுத்தவும், மாணவர்களி டையே நடத்தப்படும் தேர்வுகளை சிறப்பான முறையில் மேற்கொள்ள முடியும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×