என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    அரசு பஸ்சை வழிமறித்து டிரைவர்-கண்டக்டர் மீது தாக்குதல்

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே அரசு பஸ் டிரைவர்- கண்டக்டரை தாக்கிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம்  ஊத்தங்கரையில் இருந்து கல்லாவி வழியாக மடப்பள்ளிக்கு நேற்று ஒரு அரசு டவுன் பஸ் புறப்பட்டு சென்றது. பஸ்சை, கல்லாவி அருகே உள்ள வீராச்சிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 46)  என்பவர் ஓட்டினார். 

    இந்த நிலையில் அரசு பஸ் , மடப்பள்ளி அருகே குறுகிய சாலையில் வந்த போது, ரோட்டை மறித்து கொண்டு, மடப்பள்ளி பகுதி அம்பேத்கார் நகரை சேர்ந்த வாலிபர் சிவசக்தி (20) உள்பட 3  பேர் நின்று கொண்டிருந்தனர். இதனால் டிரைவர் பரமசிவம், கண்டக்டர் கிருஷ்ணன் (52) ஆகியோர், அந்த வாலிபர்களிடம் ரோட்டில் இப்படி நிற்காதீர்கள்... என்று கூறினர்.

    இதை கேட்டு ஆத்திரம் அடைந்த 3 வாலிபர்களும், டிரைவர், கண்டக்டரை தகாத வார்த்தைகளால் ஆபாசமாக பேசினர். மேலும் இருவரையும் தாக்கி விட்டு 3 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து கண்டக்டர் கிருஷ்ணன், ஊத்தங்கரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக இருந்து வரும் சிவசக்தி உள்பட 3 பேரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
    Next Story
    ×