என் மலர்
உள்ளூர் செய்திகள்

விஷ்ணு துர்க்கை அய்யப்ப சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்த போது எடுத்த படம்.
சேத்துப்பட்டில் விஷ்ணு துர்க்கை அம்மன் அய்யப்பசுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம்
சேத்துப்பட்டில் விஷ்ணு துர்க்கை அம்மன் அய்யப்பசுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பழையபேட்டை வந்தவாசி சாலையில் உள்ள விஷ்ணு துர்க்கை அய்யப்பன் கோவில் பஞ்ச வர்ணம் பூசி மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
கடந்த 11-ந்தேதி வெள்ளிக்கிழமை கணபதி பூஜை அங்குரார்ப்பணம் வாஸ்து சாந்தி பிரவேச பலி இதைத் தொடர்ந்து 12-ந்தேதி சனிக்கிழமை கோ பூஜை பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது.
பின்னர் கோவிலின் அருகில் யாகசாலை பந்தல் அமைத்து 3 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 108 கலசம் வைத்து பல்வேறு நதியிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கலசத்தை வைத்து சிவாச்சாரியார்கள் பல்வேறு மூலிகைகள் நெய் ஆகியவை மூலம் சிறப்பு யாகங்கள் நடந்தது.
பின்னர் நேற்று காலையில் மேளதாளங்கள் முழங்க புனிதநீர் கலசத்தை கோவிலை சுற்றி வந்து கோவில் விமானகோபுரத்தில் உள்ள புனித நீர் கலசத்தின் மீது புனித நீரை ஊற்றினார்கள்.
பின்னர் அங்கு கூடி இருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளித்தனர். இதில் சேத்துப்பட்டு பழம் பட்டை மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இரவு விஷ்ணு துர்க்கை அம்மன் ஐயப்பசுவாமி ஆகிய சுவாமிகள் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்தனர். இதற்கான ஏற்பாடுகளை அகில பாரத அய்யப்ப சேவா சங்கம் சேத்துப்பட்டு பழம்பேட்டை கிராம பொதுமக்கள் விழா குழுவினர் செய்திருந்தனர்.
Next Story






