என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
குடும்ப தகராறில் தீக்குளித்தவர் சாவு
குடும்பதகராறில் தீக்குளித்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள களபம் ஊராட்சி சூத்தியம்பட்டியை சேர்ந்தவர் குமார் (வயது 55). இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே குடும்பபிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த 11-ந் தேதி குமார்அவரது வீட்டில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமார் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story






