என் மலர்
உள்ளூர் செய்திகள்

தீயில் எரிந்த நிலையில் பொருட்கள்.
கூலிதொழிலாளி வீடு தீ பிடித்து எரிந்து நாசம்
மணமேல்குடியில் கூலி தொழிலாளி வீடு தீ பிடித்து எரிந்து நாசம் ஆனது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா திருப்புனவாசல் பகுதியை சேர்ந்தவர் சகுந்தலம் வயது47. மீனவ குடும்பத்தை சேர்ந்த இவர் கூலி வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று வழக்கம் போல், சகுந்தலம் வீட்டு வேலையை முடித்து விட்டு, அருகே உள்ள உறவினர்களிடம் பேசிக்கொண்டிருந்துள்னார்.
அப்போது அவர் வீட்டில் இருந்து கரும்புகை வந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சகுந்தலம் உடனடியாக வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது வீடு தீபிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து அக்கம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர். அதற்குள் வீட்டிலிருந்த 7 சவரன் நகை, கட்டில், பீரோ, டிவி, அடையாள அட்டைகள் மற்றும் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இது குறித்து திருப்புனவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story






