என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கங்கை முருகர் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.
    X
    கங்கை முருகர் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.

    முருகர் கோவில் பங்குனி உத்திர கொடியேற்றம்

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பாளேத் தோட்டத்தில் அமைந்துள்ள கங்கை குமரன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் நடந்தது.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பாளேத் தோட்டம், ஊராட்சி போக்கம்பட்டி (கிப்காட்) மலை குன்றின் மீது  ஸ்ரீகங்கை குமரன் கோவில் அமைந்துள்ளது. 

    இக்கோவிலில் 40 ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா வருவதையொட்டி கங்கை குமரன் முருகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் சிறப்பு பூஜைகள் செய்து அரோகரா கரகோஷத்துடன் கொடியேற்று விழா நடைபெற்றது. 

    விழாவில் ஊராட்சி மன்றத் தலைவர் விமலா வேலாயுதம் தலைமையில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஊத்தங்கரை தொகுதி எம் .எல்.ஏ. தமிழ்செல்வம் கொடியேற்று விழாவை தொடங்கி வைத்து சாமி தரிசனம் செய்தார். 

    விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.
    Next Story
    ×