search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல்.
    X
    நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல்.

    ரசிகர் முத்துமணி மனைவிக்கு நடிகர் ரஜினி ஆறுதல்

    மதுரையில் உடல்நலக்குறைவால் இறந்த ரஜினி ரசிகர் முத்துமணி மனைவிக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்.
    மதுரை

    தமிழகத்தில் முதல் முதலாக நடிகர் ரஜினி காந்துக்கு மதுரை மாநகரில் ரசிகர் மன்றம் அமைத்தவர் முத்துமணி (வயது 63). இவர் கடந்த சிலநாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக இறந்தார்.

    இந்தநிலையில் முத்து மணி மனைவி லட்சுமிக்கு செல்போன் மூலம் பேசி ரஜினிகாந்த் ஆறுதல் கூறி னார். 2பேருக்கும் இடையே நடந்த செல்போன் உரையாடல் வருமாறு:-

    லட்சுமி: வணக்கம் சார்

    ரஜினிகாந்த்: வணக்கம் அம்மா, மன்னிக்க வேண்டும். எனக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் சரியில்லை.

    லட்சுமி: என்ன ஆயிற்று சார்?

    ரஜினிகாந்த்: கடந்த 2 நாட்களாக இருமல், காய்ச்சல் தொல்லை.

    லட்சுமி: என் கணவர் உடல்நலக் குறைவுடன் இருந்தார். இக்கட்டான நிலையில் இருந்து மீண்டு வந்தார். அவர் இப்படி இறந்து போவார் என்று நினைக்கவில்லை.

    ரஜினிகாந்த்: ஒன்றும் கவலைப்பட வேண்டாம்.

    லட்சுமி: எங்களுக்கு திருமணமாகி ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு தான் பெண் குழந்தை பிறந்தது. அவள் இப்போது 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அவளின் திருமணத்தை பார்க்க முடியாமல் சென்று விட்டாரே என்று வருத்தமாக இருக்கிறது.

    ரஜினிகாந்த்: அதை எல்லாம் பார்த்துக்கொள்ளலாம். நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டியது இல்லை. நடப்பது எல்லாமே நன்றாகத்தான் நடக்கும்.

    லட்சுமி: சரிங்க சார்.

    ரஜினிகாந்த்: நீங்கள் சென்னைக்கு வரும்போது என்னை வந்துபாருங்கள் கவலைப்பட வேண்டாம்“

    -இவ்வாறு உரையாடல் நடந்தது.
    Next Story
    ×