என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொதுமக்களிடம் சண்முகையா எம்.எல்.ஏ. குறைகளை கேட்ட காட்சி.
ஓட்டப்பிடாரம் தொகுதியில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த எம்.எல்.ஏ.
ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை சண்முகையா எம்.எல்.ஏ. கேட்டு அறிந்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் குமாரகிரி ஊராட்சி ராமச்சந்திராபுரம், செந்திஅம்பலம், கோரம்பள்ளம் ஊராட்சி பெரியநாயகிபுரம், மாப்பிள்ளையூரணி ஊராட்சி சுனாமிநகர், கணபதிநகர், ஜாகிர்உசேன் நகர், கீதாஜீவன்நகர், ராம்தாஸ் நகர் போன்ற பகுதிகளில் சண்முகையா எம்.எல்.ஏ. நேரில் சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, சுப்பிர மணியன், வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் ராமராஜ், நாகராஜன், ஒன்றிய பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள்,
மாப்பிள்ளையூரணி ஊராட்சிமன்ற தலைவர் சரவணகுமார், டி.டி.சி. ராஜேந்திரன், கூட்டுடன்காடு ஊராட்சி மன்ற தலைவர் ஹரிபாலகிருஷ்ணன், தளவாய்புரம் ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்த குமார், மாப்பிள்ளையூரணி ரவி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






