என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்வாய்
    X
    கால்வாய்

    பூசிவாக்கம் கால்வாய், கலங்கல் ஓடை அடைப்பை சரி செய்யக்கோரி காஞ்சிபுரம் மாநகராட்சி இணை ஆணையரிடம் கோரிக்கை மனு

    காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பூசிவாக்கம் கால்வாயில் இருந்து கலங்கல் ஓடையின் வழியாக கன்னிகாபுரம் சென்று கசிக்கால்வாயில் விழுந்து ஒட்டிவாக்கம் ஏரிக்கு செல்கிறது.
    காஞ்சிபுரம்:

    முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முத்தியால்பேட்டை ஆர்.வி. ரஞ்சித்குமார் மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சி 27-வது வார்டு உறுப்பினர் ஷாலினி வேலு ஆகியோர் மாநகராட்சி இணை ஆணையர் நாராயணனிடம் கோரிக்கை மனு வழங்கினர் அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பூசிவாக்கம் கால்வாயில் இருந்து கலங்கல் ஓடையின் வழியாக கன்னிகாபுரம் சென்று கசிக்கால்வாயில் விழுந்து ஒட்டிவாக்கம் ஏரிக்கு செல்கிறது. இதனை கண்ணிகாபுரம் மெயின்ரோட்டின் அருகே கால்வாயை அடைத்து கழிவுநீர் செல்லாமல் தடை ஏற்படுத்தி நீர் தேங்கி கொசு மற்றும் பக்கத்தில் உள்ள குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட ஓடை, கால்வாயை சுத்தம் செய்து கால்வாயை கருங்கற்களால் கட்டி நிரந்தரமாக தடையின்றி செல்ல ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    மனுவை பெற்று கொண்ட இணை ஆணையர் நாராயணன் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    அதையொட்டி மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், இணை ஆணையர் நாராயணன் ஆகியோர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க காஞ்சிபுரம் மாநகராட்சி நகரமைப்பு அதிகாரி வேலாயுதத்திற்கு உத்தரவிட்டனர். உடனடியாக கன்னிகாபுரம், பூசிவாக்கம் கால்வாயை நகரமைப்பு அதிகாரி வேலாயுதம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு கால்வாயில் நீர் செல்ல முடியாமல், அந்த பகுதி ஆக்கிரமிப்பாளர் பிடியில் உள்ளதால் கழிவுநீர் செல்லமுடியாமல் தேங்கி தூர்நாற்றமும், கொசுக்கள் அதிக அளவில் காணப்பட்டது.

    இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வருவாய்துறையினருக்கு பரிந்துரைப்பதாக நகரமைப்பு அதிகாரி உறுதியளித்தார்.
    Next Story
    ×