என் மலர்
உள்ளூர் செய்திகள்

பிரியாணி கடை உரிமையாளர் மர்ம மரணம்
பெரம்பலூர் அருகே பிரியாணி கடை உரிமையாளர் மர்ம மரணம்
பெரம்பலூர் அருகே பிரியாணி கடை உரிமையாளர் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா வேப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் ராஜா (வயது 34). இவரது மனைவி சரிதா. இந்த தம்பதிக்கு விதின் என்ற மகனும், நிர்திஷா என்ற மகளும் உள்ளனர்.
சேகர்ராஜா, பெரம்பலூர் 4 ரோடு, தண்ணீர் பந்தல், புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பிரியாணி கடை வைத்து நடத்தி வந்தார்.
இந்தநிலையில் பெரம்பலூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே கருவக்காடு பகுதியில் சேகர் ராஜா இறந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார். அவரது உடலுக்கு அருகில் ஒரு மதுபாட்டில் மற்றும் விஷபாட்டிலும் கிடந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு சேகர்ராஜா தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது யாராவது மர்ம நபர்கள் அவரை கொலை செய்து வீசி விட்டு சென்றனரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதற்கிடையில் சேகர் ராஜாவின் மனைவி, போலீசாரிடம் எனது கணவருக்கு கடன்கள் ஏதுமில்லை. அவர் மனம் தைரியம் படைத்தவர். தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு அவர் மனநிலை இருந்ததில்லை. அவரது சாவில் மர்மம் இருக்கிறது. அதனை தங்கள் விசாரணையில் தெரியப்படுத்த வேண்டும் என்று கோரினார்.
பிரியாணி கடை உரிமையாளர் மர்மமாக இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story






