என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    ஓசூரில் பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

    4 மாநில தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றதால் ஓசூரில் பா.ஜனதாவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
    ஓசூர், 

    உ.பி, உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 4 மாநில சட்டசபை தேர்தலில், பா.ஜ அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது.
    இந்த வெற்றியை கொண்டாடும்வகையில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க.சார்பில் ஓசூரில் நேற்று பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண் டாடினர்.

    ஓசூர் தாலுக்கா அலுவலக சாலையில் உள்ள அண்ணாசிலையருகிலும், எம்.ஜி.ரோடில் உள்ள காந்தி சிலை அருகிலும் நடந்த நிகழ்ச்சிக்கு, மேற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். மேலும் இதில், மாவட்ட செயலாளர்கள் அம்மன் சுரேஷ், சீனிவாசன், மாநில பட்டியலின பிரிவு செயலாளர் கஸ்தூரி,   மற்றும் கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×