என் மலர்
உள்ளூர் செய்திகள்

கந்தர்வக்கோட்டையில் இருந்து வேம்பன்பட்டிக்கு உற்சவமூர்த்தி பல்லாக்கில் சென்ற காட்சி.
பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்
சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றப்பட்டது.
புதுக்கோட்டை:
கந்தர்வகோட்டை ஒன்றியம் வேம்பன்பட்டி கிராமத்தில் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கொடியேற்று விழா நடை பெற்றது.
கோவில் உற்சவ மூர்த்தியை கந்தர்வகோட்டை சிவன் கோவிலில் இருந்து பக்தர்கள் கை பல்லாக்காக வேம்பன்பட்டி கோவிலுக்கு சுமந்து வந்தனர்.
சுமார் 10 கிலோ மீட்டர் தூரமும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள் உற்சவமூர்த்திக்கு பக்திப் பெருக்குடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
உற்சவமூர்த்தி கோயிலை சென்றடைந்தவுடன், விழா தொடங்குவதை குறிக்கும் வகையில் கோவிலின் முன்புறம் கொடி ஏற்றப்பட்டது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர திருவிழா மற்றும் தேரோட்டம் வரும் 18&ந்தேதியன்று நடைபெறுகிறது. அடுத்த நாள் காலை திருக்கல்யாணம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர்,மண்டகப் படிதாரர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Next Story






