search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உப்பிலியபுரம் ஒக்கரையில் வேளாண்மை கருத்தரங்கம் நடை பெற்ற போது எடுத்த படம்.
    X
    உப்பிலியபுரம் ஒக்கரையில் வேளாண்மை கருத்தரங்கம் நடை பெற்ற போது எடுத்த படம்.

    உப்புலியபுரத்தில் வேளாண் கருத்தரங்கம்

    உப்பிலியபுரத்தில் பூச்சிக்கட்டு பாட்டில் கவர்ச்சிப் பொறியிகளின் பங்கு குறித்து கருத்தரங்கம் நடை பெற்றது.
    திருச்சி:

    உப்பிலியபுரத்தை அடுத்துள்ள ஒக்கரையில், பயிர்களிலுள்ள  பூச்சிக்கட்டுப்பாட்டில் கவர்ச்சிப் பொறிகளின் பங்கு பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது. 

    தமிழ்நாடு அரசின் வேளாண் அமைச்சகத்தின் முற்போக்குத்திட்டங்களில் இயற்கை முறை விவசாயத் திற்கு முக்கிய இடம்கொடுக்கப்பட்டுள்ளது. 

    பயிர்களிலுள்ள பூச்சிகளைக் கட்டுப்படுத்த அதிகமாக பயன்படுத்தப்படும்  ரசாயனப் பூச்சிக்கொல்லிகளின் உபயோகத்தைக் குறைப்பதற்கு பூச்சிகளைக் கவர்ந்து கொல்லும் பொறிகளைப் பயன் படுத்த  விவசாயிகளுக்கு  ஊக்கமளிப்பது பற்றி கருத்தங்கில் எடுத்துரைக்கப்பட்டது. 

    இதில் பங்கேற்ற  விவசாயிகளுக்கு, பருத்தி மற்றும் நெல் பயிர் சாகுபடியில், துளைப்பான்  பூச்சிகளை, இனக்கவர்ச்சிப்  பொறி களைப் பயன்படுத்தி  கட்டுப் படுத்த  செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. 

    உப்பிலியபுரம் உதவி வேளாண்மை இயக்குனர் செல்வகுமாரியின்  தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், பருத்தி ஆராய்ச்சி நிலையம் வேப்பந்தட்டையைச் சேர்ந்த  சோமசுந்தரம், முன்னாள் வேளாண்மைதுறை கூடுதல் இயக்குனர் கேசவன், லக்சிதா அக்ரோ பயோடெக் இயக்குனர் சித்தானந்தம் மற்றும் ஆய்வு மேம்பாட்டு மேலாளர் பிரபாகரன் ஆகியோர் பங்கேற்றனர். 

    கருத்தரங்கில்  பங்கேற்ற அனைத்து விவசாயிகளுக்கும் இனக்கவர்ச்சி  பூச்சி பொறிகளின்  மாதிரிகள் வழங்கப்பட்டு,  அடுத்து வரும் பயிர் சாகுபடிகளில் மேம்பட்ட இனக்கவர்ச்சிப் பொறிகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
    Next Story
    ×