என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்யாண ரங்கநாத பெருமாள் கோவிலில் பங்குனி உற்சவ கொடியேற்றம்.
    X
    கல்யாண ரங்கநாத பெருமாள் கோவிலில் பங்குனி உற்சவ கொடியேற்றம்.

    கல்யாண ரங்கநாத பெருமாள் கோவிலில் பங்குனி உற்சவ கொடியேற்றம்

    திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோவிலில் பங்குனி மாத உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    சீர்காழி:

    சீர்காழி அடுத்த திருநகரியில் பிரசித்தி பெற்ற கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக இக்கோவில் விளங்குகிறது. திருமங்கை ஆழ்வார் இக்கோவிலில் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். 

    பஞ்ச நரசிம்மர்களில் ஒன்றான ஹிரணிய நரசிம்மர் இக்கோவிலில் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோவிலில் பங்குனி மாத உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவையொட்டி கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் சிறப்பு வழிபாடு தீபாரதனை நடைபெற்றது. 

    பின்னர் உற்சவ கொடி ஏற்றப்பட்டது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி குணசேகரன், ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரராஜன், திருவேடு பறி உற்சவர் கமிட்டித் தலைவர் ஆளவந்தார், செயலாளர் ரகுநாதன், பொருளாளர் ரங்கராஜன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×