என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    60 அடி ஆழ கிணற்றில் விழுந்த 2 நாய்கள் உயிருடன் மீட்பு

    60 அடி ஆழ கிணற்றில் விழுந்த 2 நாய்கள் உயிருடன் மீட்கப்பட்டது.
    புதுக்கோட்டை: 

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கருக்ககுறிச்சி வடத் தெருவை சேர்ந்த விவசாயி வீராசாமி க்கு சொந்தமான 60அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லா கிணற்றில் 2 நாய்கள் தவறி விழுந்துவிட்டது.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனே கறம்பக்குடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.  தகவலறிந்த குழந்தைராசு தலைமையிலான தீயணைப்பு துறையினர் 60 அடி ஆழ கிணற்றிலிருந்து இரண்டு நாய்களை பத்திரமாக உயிருடன் மீட்டு, 

    அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர். நாய்களை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் தங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.

    Next Story
    ×