என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார்.
    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள பழனியாண்டவர் கோவில் தர்மதோப்பு பகுதியை சேர்ந்தவர் மணி (வயது55). இவர் நேற்று வீட்டிற்கு குடத்தில் குடிநீர் எடுத்து விட்டு சாலையை கடக்க முயன்றார். 

    அப்போது போச்சம்பள்ளி நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மணி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மணி உயிரிழந்தார். 

    மோட்டார் சைக்கிளில் வந்த தருமபுரி மாவட்டம், கொக்கரப்பட்டியை சேர்ந்த பசுபதி (25) என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போச்சம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியான மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×