என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுநீரக தின விழிப்புணர்வு
    X
    சிறுநீரக தின விழிப்புணர்வு

    கடலூரில் உலக சிறுநீரக தின விழிப்புணர்வு பேரணி

    சிறுநீரக நோய் வராமல் தடுக்க செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
    கடலூர்:

    ஆண்டுதோறும் மார்ச் 10-ந் தேதி உலக சிறுநீரக தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு உலக சிறுநீரக தினத்தையொட்டி கடலூரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு கூடுதல் கலெக்டர் -ரஞ்சித் சிங் தலைமை தாங்கி, கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். 

    அரசு ஆஸ்பத்திரி சூப்பிரண்டு சாய்லீலா, கண் சிகிச்சை பிரிவு துறை தலைவர் அசோக் பாஸ்கர், மருத்துவத்துறை அனந்தகுமார், சிறுநீரக சிகிச்சை பிரிவு திருமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கடலூர் அரசு மருத்துவமனையின் பயிற்சி செவிலியர்கள் பலர் கலந்து கொண்டு சிறுநீரக நோய் வராமல் தடுக்க செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 

    கடலூர் டவுன்ஹாலில் இருந்து தொடங்கிய பேரணியானது பாரதி சாலை வழியாக சென்று இறுதியாக அரசு ஆஸ்பத்திரி வளாகத்தை சென்றடைந்தது. இதில் சிறுநீரக துறை பொறுப்பு செவிலியர்கள் பானுமதி, லதா, செவிலியர் கண்காணிப்பாளர்கள் பத்மாவதி, அனுசியா, புவனேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×