என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொள்ளை
பண்ருட்டி அருகே கோவில் உண்டியலை உடைத்த கொள்ளையர்கள்
பண்ருட்டி அருகே கோவில் உண்டியலை உடைத்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சென்னை சாலை எல்.என்.புரம்வ.உ.சி நகரில் பிரசன்ன மாரியம்மன் கோவில் உள்ளது.
நேற்று இரவு கோவில் நிர்வாகி சுரேஷ்குமார் வழக்கம் போல இரவு கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார் .அப்போது இதை நோட்டமிட்டுக் கொண்டிருந்த மர்ம ஆசாமி அந்த உண்டியலை உடைத்து பணம் நகை கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளார்.
இரவு ரோந்து பணியில் இருந்த போலீசார் அந்த வழியாக சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளதால் போலீஸாரை கண்டவுடன் கொள்ளையர்கள் தப்பி ஓடினர். இதனால் உண்டியலில் இருந்த நகை பணம் தப்பியது.
இதுபற்றி கோவில் தர்மகர்த்தா சுரேஷ்குமார் பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் மற்றும் போலீசார்போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






