என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் கிருஷ்ணாலயா திரையரங்கில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
பா.ம.க. எதிர்ப்பு எதிரொலி- சூர்யா படம் வெளியான தியேட்டர்களில் போலீஸ் குவிப்பு
‘ஜெய்பீம்’ பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அதுவரை ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை வெளியிட கூடாது என்று பா.ம.க. நிர்வாகிகள் சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தை அணுகி மனு கொடுத்தனர்.
கடலூர்:
நடிகர் சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓ.டி.டி. இணையதளத்தில் வெளியானது.
இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால், படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று பா.ம.க. சார்பில் அப்போதே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது சூர்யா நடிப்பில் ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற படம் தமிழகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டங்களை சேர்ந்த பா.ம.க. நிர்வாகிகள் சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தை அணுகி ஏற்கனவே தாங்கள் வைத்த நிபந்தனைகளின்படி ‘ஜெய்பீம்’ பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அதுவரை ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை வெளியிட கூடாது என்று மனு கொடுத்தனர்.
இன்று சூர்யாவின் புதிய படம் வெளியாகும் நிலையில் பா.ம.க. சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படலாம் என்ற சூழ்நிலை உருவானது. இதனால் அந்த படம் வெளியாகும் தியேட்டர்களில் இன்று அதிகாலை முதலே போலீசார் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் ரசிகர் மன்ற காட்சிகள் திரையிடப்பட்டன.
கடலூரில் கிருஷ்ணாலயா தியேட்டரில் இந்த படம் வெளியானது. காலை 7 மணிக்கு ரசிகர் மன்ற காட்சி திரையிடப்பட்டது. இதையொட்டி தியேட்டர் முன்பாக போலீசார் அதிகாலை முதலே குவிக்கப்பட்டிருந்தனர்.
தியேட்டரின் முன்பக்க கதவு மூடப்பட்டு இருந்தது. காட்சிக்கான கூப்பன், டிக்கெட் வைத்திருக்கும் ரசிகர்கள் சோதனை செய்த பிறகே தியேட்டருக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து போலீசார் பாதுகாப்புடன் சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ படம் திரையிடப்பட்டு வருகிறது.

Next Story