என் மலர்
உள்ளூர் செய்திகள்

பயிற்சி வகுப்புகள்
போட்டி தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்
விருதுநகர் மாவட்டத்தில் போட்டி தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மத்திய&மாநில அரசால் அறிவிக்கப்படும் அனைத்து விதமான போட்டித்தேர்வுகளுக்கும் கட்டணமில்லாத பயிற்சி வகுப்புகள் நடத்தபட்டு வருகிறது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள, டி.என்.பி. எஸ்.சி தொகுதி -2 மற்றும் தொகுதி -2ஏ பணிக்காலியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் அரசின் உரிய வழிகாட்டுதல் நெறி முறைகளைப் பின்பற்றி சமூக இடைவெளியுடன் போட்டித்தேர்வுகளுக்கு படிப்பதற்கு ஏதுவாக நேரடியாக இலவச பயிற்சி வகுப்புகள் காலை 10.30மணி முதல் 12.30மணிவரையில் 7ந்முதல் நாள்தோறும் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. பயிற்சியின் போது மாதிரி தேர்வுகள் நடத்தப்படும்.
பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக தன் னார்வ பயிலும் வட்ட நூலகத்தில் இத்தேர்வுக்கான புத்தகங்களை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் மாணவர்களுக்கான தேர்வுக்கான பாடக்குறிப்புகளும் வழங்கப்படும்.
மேலும் மாணவர்கள் பயனடையும் வகையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் காணொலிகாட்சி மூலம் கற்பித்தல் மற்றும் இத்தேர் விற்கான பாடக்குறிப்புகள் புத்தகங்கள் மாதிரி வினாத்தாள் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து பயன் படுத்திக்கொள்ளலாம்
இப்பயிற்சிக்கு விருப்ப முள்ள வர்கள் 96777 34590, 9384135550 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் வாயிலாக தங்களது பெயரை குறுஞ்செய்தியாக அனுப்பி பதிவு செய்து கொள்ளுமாறு கோட்டு கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
Next Story






