என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவி ஆர்த்திகா தனது பெற்றோருடன் கலெக்டர் லலிதாவை சந்தித்து நன்றி கூறினார்.
தரங்கம்பாடி பகுதி மருத்துவ மாணவி கலெக்டருடன் சந்திப்பு
உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தரங்கம்பாடி பகுதி மருத்துவ மாணவி, பெற்றோருடன் கலெக்டருக்கு நன்றி தெரிவித்தார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதி தரங்கம்பாடி வட்டம் கோவசேரி ஆனந்தன், கவிதா ஆகியோரின் மகள் ஆர்த்திகா மருத்துவ படிப்பு 5-ம் ஆண்டு உக்ரைன் நாட்டில் படித்து வந்தார்.
உக்ரைன்-ரஷ்யா இடையே போர் நடைபெற்று வருவதை அடுத்து அந்த மாணவி அங்கிருந்து தமிழகம் வருவதற்காக கோரிக்கை வைத்திருந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துரித நடவடிக்கையால் உக்ரேன் நாட்டிலிருந்து கடந்த 6&ம் தேதி ஆர்த்திகா மீட்கப்பட்டு சென்னை வந்தடைந்தார்.
இதையடுத்து ஆர்த்திகா மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதாவை தனது குடும்பத்துடன் நேரில் சந்தித்து முதலமைச்சருக்கும், மாவட்ட கலெக்டருக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
Next Story






