என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியாத்தத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு அடிப்படை பயிற்சி வழங்கும் முகாம் நடைபெற்றது.
    X
    குடியாத்தத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு அடிப்படை பயிற்சி வழங்கும் முகாம் நடைபெற்றது.

    குடியாத்தத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி

    குடியாத்தத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
    குடியாத்தம்:

    குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 426 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு வட்டார அளவில் 2 நாட்கள் அடிப்படை பயிற்சி வழங்கும் முகாம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

    இந்த பயிற்சி முகாமிற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ். சாந்தி தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கதிரவன், சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வட்டார வளர்ச்சி அலுவலர் கே.எஸ்.யுவராஜ் வரவேற்றார். 

    2 நாள் பயிற்சி முகாமை குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம் தொடங்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சக்திதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×