என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்
    X
    நெல்

    அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்- கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை

    வாலாஜாபாத் அருகே அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வாலாஜாபாத் அருகே உள்ள தென்னேரி, அகரம், மஞ்சமேடு கட்டவாக்கம், தொள்ளாழி, திருவங்கரணை, அயிமிஞ்சேரி உள்ளிட்ட கிராமங்களில் பயிரிடப்பட்ட நெல் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.

    ஆண்டுதோறும் அரசு சார்பில் விவசாயிகள் பயன் பெறும் அளவில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி தென்னேரி பகுதியில் வழக்கம்போல அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இது தொடர்பாக 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். இதேபோல் கட்டவாக்கம், மஞ்சமேடு பகுதியில் அறுவடை செய்ய தயார் நிலையில் உள்ள காரணத்தால் உடனடியாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க உத்தரவிடக்கோரி ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலம் அருள் தலைமையில் விவசாயிகள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    Next Story
    ×