என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குன்னூர் அருகே பள்ளிக்குள் புகுந்து பொருட்களை சூறையாடிய கரடி
Byமாலை மலர்8 March 2022 10:40 AM GMT (Updated: 8 March 2022 10:40 AM GMT)
கரடியை கூண்டுவைத்து பிடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக தேயிலைத் தோட்டங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் சர்வசாதாரணமாக உலவி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
குன்னூர் அருகே உள்ள நான்சச் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் படித்து வருகின்றனர். நேற்று காலை மாணவர்கள், ஆசிரியர்கள் வழக்கம்போல பள்ளிக்கு வந்தனர்.
அப்போது பள்ளியின் வகுப்பறை மற்றும் கதவுகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்திருந்தது. இதையடுத்து, அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து பார்த்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அதிகாலை நேரத்தில் கரடி ஒன்று பள்ளிக்குள் புகுந்து வகுப்பறையில் உள்ள மேஜைகள் மற்றும் கதவுகளை சேதப்படுத்தியுள்ளது. மேலும் சமையல் அறைக்குள் புகுந்து, அங்கிருந்த உணவுபொருட்களை தின்று, தூக்கி வீசி எறிந்தும் அட்டகாசத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து மக்கள் கூறுகையில், கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்த கரடியை கூண்டுவைத்து பிடித்து அடர்ந்த வனப் பகுதிக்குள் விடுவிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×