என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறுமிக்கு திருமணம்
சிறுமிக்கு திருமணம்- பெற்றோர் மீது வழக்கு
வத்திராயிருப்பு அருகே சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக பெற்றோர் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாப்பட்டி மேல தெருவை சேர்ந்த தர்மராஜ் என்பவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுமியை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வத்திராயிருப்பு சமூகநலத்துறை விரிவாக்க அலுவலர் மல்லிகாவுக்கு புகார் வந்தன. இதைதொடர்ந்து சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தியதில் சிறுமிக்கு திருமணம் நடந் தது தெரியவந்தது.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சிறுமியை திருமணம் செய்த தர்மராஜ், உடந்தையாக இருந்த அவரது பெற்றோர் ராமச்சந்திரன், புதுமாடத்தி, சிறுமியின் பெற்றோர் கண்ணன், மகேஸ்வரி ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Next Story






