என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
உக்ரைனில் இருந்து திரும்பிய வேதாரண்யம் மாணவர்
Byமாலை மலர்8 March 2022 10:10 AM GMT (Updated: 8 March 2022 10:10 AM GMT)
உக்ரைனில் இருந்து திரும்பிய வேதாரண்யம் மாணவர் பெரிய ஆபத்தில் இருந்து தப்பி வந்துள்ளேன் என பேட்டியளித்துள்ளார்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த பஞ்சநதிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் நமச்சிவாயம். இவரது மகன் அகத்தியன். இவர் உக்ரைன் நாட்டு அதிபர் மாளிகையில் இருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ள கார்க்யூ மருத்துவப் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு எம்.பி.பிஎஸ் பட்டப் படிப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலால், அதிபர் மாளிகை அருகே உள்ள பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் எங்கும் செல்லமுடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய மாநில அரசுகளின் துரித நடவடிக்கையால், உக்ரைனில் இருந்து அழைத்து வர பட்ட அகத்தியன் புதுதில்லி அழைத்து வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து சென்னை வழியாக இன்று சொந்த ஊருக்கு அழைத்து வரப்பட்டார்.
இது குறித்து மாணவர் அகத்தியன் கூறும்போது:-
மிகப் பெரிய ஆபத்தில் இருந்து தப்பி ஊர் திரும்பியுள்ளேன். நான் உயிருடன் திரும்பியதற்கு மத்திய மாநில அரசுகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உக்ரைன் நாட்டில் இருந்து ஊர் திரும்ப 5 நாட்கள் பதுங்கு குழியில் ஒரு வேளை உணவருந்தினேன். ரயிலின் கழிவறையில் 26 மணி நேரம் நின்று கொண்டே பயணித்தேன்.
என்னை போன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உக்ரைனில் சிக்கி உள்ளனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட வேண்டும்.
எனது கல்வி சான்றிதழ்கள் அனைத்தும் உக்ரையின் பல்கலைக் கழகத்தில் உள்ளது. தற்போது என்னை போன்ற மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே மத்திய மாநில அரசுகள் உக்ரைனில் படித்து வரும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு விரைவில் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றார்.
வேதாரண்யம் நகரமன்ற தலைவர் புகழேந்தி, மேற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் உதயம் முருகையன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பழனியப்பன், வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கமலா அன்பழகன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரமுகர்கள் மாணவர் அகத்தியனை பார்த்து நலம் விசாரித்தனர்.
அகத்தியன் அண்ணன் பாலாஜி சீனாவில் மருத்துவம் படிப்பதற்காக சென்று இரண்டு ஆண்டுகள் படித்த கொண்டிருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக தாயகம் திரும்பினார்.
மீண்டும் படிப்பைத் தொடர சீனா அரசு விசா கொடுக்க மறுப்பதால் அவரது படிப்பை தொடர்வது கேள்விக்குறியாகி உள்ளது.
ஒரே வீட்டில் வெளிநாட்டில் இரண்டு மகனை மருத்துவம் படிப்பிற்காக அனுப்பிய நிலையில் இரண்டு மகன்களும் படிப்பை தொடரமுடியாமல் சொந்த ஊர் திரும்பி இருப்பது பெற்றோரிடையே மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X