என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவன் பலி
பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவன் பலியான சம்பவத்தில் விசாரணை
திருச்சி:
திருச்சி மாவட்டம் லால்குடி ஜங்கமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகன் நந்தகுமார் (வயது 19). இவர் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்த வந்தார்.
இந்நிலையில் இன்று வழக்கம் போல் கல்லூரிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு, திருச்சி நோக்கி செல்லும் நாமக்கல் பேருந்தின் முன் பகுதி படிகட்டில் நின்று பயணம் மேற்கொண்டுள்ளார்.
பேருந்து சிறிது தூராம் சென்ற போது, நந்தகுமார் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அந்த பேருந்தின் பின்சக்கரத்தில் சிக்கி அதே இடத்தில் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story