என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆறுகாட்டுதுறைக்கு புதிய பஸ் சேவை
புதிய பஸ் சேவை தொடக்கம்
ஆறுகாட்டுதுறையில் புதிய பஸ் சேவை தொடங்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகரமன்ற தலைவராக கடந்த 4&ந் தேதி தி.மு.க.வை சேர்ந்த புகழேந்தி பதவி ஏற்றார். பதவி ஏற்ற இரண்டு நாளில் மீனவ கிராம மக்களின் கோரிக்கை ஏற்று முதல் பணியாக தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் வழிகாட்டுதலுடன் போக்குவரத்து துறை அமைச்சருடன் பேசி 15 ஆண்டுகளாக அரசு பஸ் செல்லாத ஆறுகாட்டுதுறை கிராமத்திற்கு புதிய பஸ் இயக்கபட்டது.
இந்த புதிய பஸ்சை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவரும் நாகை மாவட்ட தி.மு.க செயலாளருமான கவுதமன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். தினமும் இந்த பஸ் 3 முறை இயக்கபடும் என்றும், பின்னர் 6 முறை இயக்கபடும் எனவும் போக்குவரத்து துறையினர் தெரிவித்தனர். இதனை முன்னிட்டு மீனவ கிராம மக்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி வரவேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் வேதாரண்யம் நகரமன்ற தலைவர் புகழேந்தி, துணை தலைவர் மங்களநாயகி, மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன், அரசு வழக்கறிஞர் வெங்கடேஸ்வரன், மாவட்ட வழக்கறிஞர் அணி அன்பரசு, நகரமன்ற உறுப்பினர்கள் இமயா, இளவரசி, அன்னலெட்சுமி, பாலசுப்பிரமணியன், அம்சவள்ளி, ராஜீ, அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் மகேந்திரகுமார், வேதாரண்யம் அரசுபோக்குவரத்து கழக மேலாளர் சுரேஷ்குமார், ஆறுகாட்டுதுறை கிராம பஞ்சாயத்தார்கள் முருகன், கார்த்தி, மயில்வாகன் கரிகாலன், அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க தலைவர் ஹரிகிருஷ்ணமூர்த்தி, செயலாளர் நெடுஞ்செழியன், பொருளாளர் கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






