என் மலர்
உள்ளூர் செய்திகள்

குடியாத்தம் அடுத்த சேம்பள்ளியில் ரூ-.4 லட்சத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறக்கப்பட்டது.
குடியாத்தம் அடுத்த சேம்பள்ளி கிராமத்தில் ரூ.4 லட்சத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம்
குடியாத்தம் அடுத்த சேம்பள்ளி கிராமத்தில் ரூ.4 லட்சத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டது.
குடியாத்தம்:
குடியாத்தம் அடுத்த சேம்பள்ளி கிராமத்தில் சுமார் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் கிராம மக்களின் பயன்பாட்டிற்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டது.
இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் டி.பி.துளசிராமுடு தலைமை தாங்கினார்.
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிட்டிபத்மநாபன், வக்கீல் டி.ஜி.பிரபாகரன், ஒன்றியக்குழு உறுப்பினர் பிரகாசம், ஊராட்சி மன்ற துணை தலைவர் சவுந்தரராஜன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மூத்த வழக்கறிஞர் டி.எம். விஜயராகவலு கலந்து கொண்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






