search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீட்பு
    X
    மீட்பு

    திருப்பூர் அருகே ரூ.15 லட்சம் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு கோவில் நிலம் மீட்பு

    திருப்பூர் அருகே ரூ.15 லட்சம் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு கோவில் நிலம் மீட்கப்பட்டது. கோவில் நிலத்தை மீட்கும்போது அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாதவாறு இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள லக்கமநாயக்கன்பட்டி கிராமம் அழகேஸ்வரசாமி கோவிலுக்கு சொந்தமான ரூ.15 லட்சம் மதிப்பிலான 2.96 ஏக்கர் நிலம் வெள்ளகோவில் தாராபுரம் ரோட்டில் ஆண்டிபாளையம் பிரிவில் இருந்து புதுப்பை செல்லும் பாதையில் உள்ளது.

    இந்த நிலம் 15 ஆண்டுகளாக லக்கமநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த சிலரது ஆக்கிரமிப்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது, இந்த நிலத்தை மீட்கக்கோரி திருப்பூர் இணை ஆணையர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ந்தேதி ஆக்கிரமிப்பாளர்கள் நிலத்தை கோவிலுக்கு ஒப்படைக்க உத்தரவிட்டும் இதுவரை ஒப்படைக்கவில்லை.

    இதையடுத்து இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி திருப்பூர் உதவி ஆணையர் செல்வராஜ் தலைமையில் தனி தாசில்தார் (கோவில் நிலங்கள்) கோபாலகிருஷ்ணன், காங்கேயம் சரக ஆய்வர், தக்கார் தேவி பிரியா ஆகியோ கோவிலுக்குச் சொந்தமான 2.96 ஏக்கர் நிலத்தை மீட்டனர். கோவில் நிலத்தை மீட்கும்போது அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாதவாறு இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


    Next Story
    ×