என் மலர்
உள்ளூர் செய்திகள்

திமுக
சிதம்பரம், வடலூர் நகராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க. வெற்றி
வடலூர் நகராட்சியில் தி.மு.க. 24 வார்டுகளில் வெற்றி பெற்று உள்ளது. எனவே நகராட்சி தலைவர் பதவிக்கு சிவக்குமார், துணைதலைவர் பதவிக்கு சுப்பராயலு ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. தற்போது நடந்து முடிந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி 31 வார்டுகளை கைப்பற்றியது. எனவே நகர தி.மு.க. செயலாளர் செந்தில்குமார் தலைவர் பதவி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதற்கான தேர்தல் இன்று காலை நடந்தது.
இவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. எனவே செந்தில்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
நகராட்சி துணை தலைவர் பதவி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. அந்த கட்சியின் வேட்பாளராக முத்துகுமார் அறிவிக்கப்பட்டு உள்ளார். இதற்கான தேர்தல் இன்று மாலை நடக்கிறது. அவர் துணைதலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார்.
வடலூர் நகராட்சியில் தி.மு.க. 24 வார்டுகளில் வெற்றி பெற்று உள்ளது. எனவே நகராட்சி தலைவர் பதவிக்கு சிவக்குமார், துணைதலைவர் பதவிக்கு சுப்பராயலு ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். தலைவர் பதவி தேர்தலில் யாரும் எதிர்த்து மனுதாக்கல் செய்யவில்லை. எனவே சிவக்குமார் போட்டின்றி தேர்வானார்.

Next Story